சென்னை: த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜய். அந்த தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயிக்கு வழங்கினார்.
மீனவர், நெசவாளர், மூன்றாம் பாலினத்தவரிடமும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. “அறம், பொருள், இன்பத்தின் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பலரை போல் சாத்தியம் இல்லாததை அள்ளிவிடமாட்ோம்” அதிமுக ரூ.10000 என அறிவித்தால் திமுக ரூ.8000 கூப்பன் என்கிறது.
அதிமுக இலவச பிரிட்ஜ் என்று அறிவித்தால் திமுக ரூ.8000 கூப்பன் என்கிறது. திமுக – அதிமுக தேர்தல் அறிக்கைகள் வேறு வேறு இல்லை. திமுக – அதிமுக கட்சிகள் ஊழல் கூட்டம். சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது. 60 வயதுக்கு உட்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2500.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள். மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை.
தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள், ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம். போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு. குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம், மலிவு விலை மருந்துகளும் வழங்கப்படும். இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.