சென்னை: திரையில் 50 நாட்களைக் கடந்த கென் கருணாஸின் “யூத்”… உலக அளவில் ரூ.82 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பால் கவனத்தை ஈர்த்த கென் கருணாஸ், தற்போது இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகியுள்ள “யூத்” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுப் பாக்ஸ் ஆபீஸில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. திரையிடப்பட்ட 50 நாட்களில் உலகளவில் சுமார் 82 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக வெளியான 2 வாரங்களிலேயே 68 கோடி ரூபாயைக் கடந்து சாதனை படைத்த இந்தப் படம், தற்போது 50 நாட்களைக் கடந்த பின்னரும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி கென் கருணாஸின் சினிமா பயணத்தில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.