சென்னை: முதலமைச்சர் விஜய் எனது நீண்ட கால நண்பர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆட்சி நிர்வாகம் என்று வரும்போது அனுபவமே மிக முக்கியமானது. அந்த வகையில், தி.மு.க. என்பது மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மூத்த கட்சி (சீனியர்ஸ்) என்பதை யாரும் மறந்துவிட முடியாது” என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழுத்தமாகத் தெரிவித்தார்.
தமிழகச் சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக உரையாற்றினார். புதிய சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே இருக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான உறவு குறித்துப் பேசினார்.
அப்போது, தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் தாமும் ஒரே கல்லூரியில் பயின்றவர்கள் என்கிற பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முதலமைச்சர் விஜய் எனது நீண்ட கால நண்பர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆட்சி நிர்வாகம் என்று வரும்போது அனுபவமே மிக முக்கியமானது. அந்த வகையில், தி.மு.க. என்பது மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மூத்த கட்சி (சீனியர்ஸ்) என்பதை யாரும் மறந்துவிட முடியாது” என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
நட்பைத் தாண்டி அரசியல் களத்தில் தங்கள் கட்சிக்கு இருக்கும் சீனியாரிட்டி குறித்து அவர் குறிப்பிட்டது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைப்போம் என்று அவர் உறுதி அளித்தார். எதிர்க்கட்சியாகத் தங்களது கடமையைச் சரியாகச் செய்வோம் என்றும், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கமாட்டோம் என்றும் அவர் பேசினார்.