சென்னை: தங்கம் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.120 குறைந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14 ஆயிரத்து 765-ல் இருந்து ரூ.15 குறைந்து ரூ.14 ஆயிரத்து 750-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 120-ல் இருந்து ரூ.120 குறைந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
இதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.305-ல் இருந்து ரூ.15 குறைந்து ரூ.290-க்கு விற்றது. வெள்ளி கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு நேற்று முன்தினம் விற்பனையானது. இதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
இந்த நிலையில், சென்னையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.