கருவாட்டில் வறுவல், குழம்பு போன்றவைகளையே செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று வித்தியாசமாக கருவாட்டில் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். அருமையாக இருக்கும்.
தேவையானவை
பாசுமதி அரிசி – 1/2 கிலோ
வஞ்சிரம் கருவாடு – 1/2 கிலோ
வெங்காயம் – 1/2 கிலோ
பழுத்த தக்காளி – 1/2 கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் – 6
காஷ்மீரி சில்லி – 2 தேக்கரண்டி
தயிர் – 1 கோப்பை
கொத்துமல்லித்தழை – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
புதினா – தேவையான அளவு
பட்டை- 1
ஏலம்- 1,
கிராம்பு – 1
பிரியாணி இலை – 2
உப்பு தூள் – தேவையான அளவு
எண்ணெய் – 200 மில்லி
நெய் – 50 மில்லி
எலுமிச்சை – 1/2 பழம்
செய்முறை: அரிசியை கழுவி ஊறவைக்கவும். அடுத்து கருவாட்டை கழுவி எண்ணெயில் பொரித்து வைக்கவும். அடுத்து தக்காளி, வெங்காயத்தை வெட்டி வதக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, தக்காளி, தயிர் சேர்த்து வதக்கவும். அடுத்து உப்பு, கருவாடு, அரிசி போட்டு அரிசியைவிட இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு விசில் விடவும். பின்னர் நெய், கொத்தமல்லி, எலுமிச்சை பிழிந்து தம் போட்டு இறக்கினால் கருவாட்டு பிரியாணி ரெடி. சுவை சூப்பராக இருக்கும்.