சென்னை: தவெக அரசை விமர்சித்ததால் 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களை அமைச்சர் ராஜ்மோகன் மறுத்துள்ளார்.
தவெக அரசை விமர்சனம் செய்ததற்காக 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் மற்றும் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தள பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற தகவல் தவறானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில செட்-டாப் பாக்ஸ்களில் மட்டுமே அந்த சேனல்கள் தற்காலிகமாக ஒளிபரப்பப்படவில்லை. சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை சரிசெய்ய முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.