மேற்குவங்கம்: டிஎம்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் போலி கையெழுத்து இடப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மம்தா பானர்ஜி இல்லத்தில் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் டிஎம்சி 80 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டிஎம்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 70 பேர் பங்கேற்றதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆனால், அந்த ஆவணங்களில் இடம்பெற்ற சில எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் போலியாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக ஏற்கனவே அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மம்தா பானர்ஜியின் இல்லத்திலும் 5 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டது.
இதுவரை 13 எம்எல்ஏக்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், 3 எம்எல்ஏக்கள் தங்களது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.