சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த ரூ.28 கோடி லஞ்ச வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு திட்ட அனுமதி வழங்க ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் 2024-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், விசாரணையில் வைத்திலிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்து வழக்கை முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீதான விசாரணை ஜூன் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.