ஸ்பெயின்: தொழில்நுட்ப கோளாறால் விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில், போப் ஆண்டவருக்கு ஸ்பெயின் மன்னர் தனது சொந்த ஜெட் விமானத்தை வழங்கினார்.
வாடிகன் தலைவர் போப் ஆண்டவர், ஸ்பெயினில் ஒரு வார கால சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து ரோம் திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப், தனது சொந்த பால்கன் ஜெட் விமானத்தை போப் ஆண்டவரின் பயணத்திற்காக வழங்க முன்வந்தார். அதனை ஏற்றுக்கொண்ட போப் ஆண்டவர், அரச குடும்ப விமானத்தில் பாதுகாப்பாக ரோம் சென்றடைந்தார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக போப் பயணம் செய்ய இருந்த விமானம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.