சென்னை: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூன் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை அதற்கேற்ப திட்டமிடுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.