மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், இயக்குநர் ஷிவ் ராவில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யுனிவர்ஸ் படமாகும்.
இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல வெற்றிப்படங்களை வழங்கிய யாஷ் ராஜ் நிறுவனம், முதல்முறையாக பெண் மையக் கதையுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இதில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வைரலான நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஆலியா பட்டின் அதிரடி தோற்றம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்பு ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.