சென்னை: பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது ‘அன்பே டயானா’ திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.