ஹைதராபாத் நகரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 825 கிலோ போலி பன்னீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செயற்கைப் பால் மற்றும் தாவரக் கொழுப்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த போலி பன்னீர், 45-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் எட்டு உற்பத்தி மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து காவல்துறை துணை ஆணையர் வைபவ் கெய்க்வாட் ரகுநாத் தகவல் தெரிவித்துள்ளார்.