சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.எம். சுப்பிரமணியன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரி மகள் மேனகாவும் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. நடிகர் மன்சூர் அலிகானும் தவெகவில் இணைந்தார்.