பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். பயணிகள் சென்ற பிக்கப் வாகனத்தை குறிவைத்து முதலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.