சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கும் நேரத்திலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்லும் போக்குவரத்தில் ஈரான் தலையிட்டால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதோடு, ஜலசந்தியின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றுவோம். நீங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், உங்களுக்கே ஒரு நாடு இருக்காது என்று ஈரான் அதிகாரிகளிடம் நான் கூறினேன்” என்று டிரம்ப் எச்சரித்து இருக்கிறார்.