புதுடில்லி: சீனாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் மிகவும் அவசியம் என இந்தியா தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. எல்லையில் அமைதி நிலவுவது இரு நாடுகளின் ஒட்டுமொத்த உறவுக்கும் அடிப்படையாக இருக்கும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த கால எல்லை பதற்றங்களுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவுகளை சீர்படுத்த முயற்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.
