சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சம்பத் ராஜ், சிவ பண்டிட், ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கெனவே வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடலும், திரைப்படத்தின் டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இரண்டாவது பாடலாக ‘அய்யய்யோ அம்மாடி’ வெளியாக இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா வெளியிடுவது இசை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி மற்றும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
