By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை
    1 Min Read
    உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய்
    1 Min Read
    வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருட முயற்சி: நீலகிரியில் 5 பேர் கைது
    1 Min Read
    திருப்பதி திருக்குடை பாதயாத்திரை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
    1 Min Read
    கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு விதிமுறைகள் கட்டாயம்: அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு விதிமுறைகள் கட்டாயம்: அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு விதிமுறைகள் கட்டாயம்: அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம்

கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு விதிமுறைகள் கட்டாயம்: அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு

Nagaraj
Last updated: September 8, 2026 10:04 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: குற்ற வழக்குகளில் ஒருவரை கைது செய்யும்போது அரசியலமைப்புச் சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய கட்டாய வழிமுறைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த ‘ஃபிட்ஜி’ தனியார் கல்விப் பயிற்சி மையங்கள் கடந்த ஆண்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டன. இதையடுத்து, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகை திருப்பி வழங்கப்படவில்லை என்று 533 பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில், ரூ.10.63 கோடி மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் தமிழக நிர்வாக பங்குதாரரான அங்குர் குமார் ஜெயினை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர்.

இதையடுத்து, அங்குர் குமார் ஜெயினுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் ஆர்.அஸ்வின் ஆகியோர், மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றும், அவரது செயற்கைக் கால் சேதமடைந்துள்ளதால் சிறையில் நடமாட முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறி ஜாமீன் வழங்க கோரினர். இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாகவும், இயந்திரத்தனமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஒருவரை கைது செய்யும்போது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(1)-ன்படி பின்பற்ற வேண்டிய கட்டாய நடைமுறைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை தமிழக டிஜிபி வரும் நவம்பர் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

 

You Might Also Like

தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை

உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய்

வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருட முயற்சி: நீலகிரியில் 5 பேர் கைது

திருப்பதி திருக்குடை பாதயாத்திரை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பஞ்சப்பூரில் ரூ.234 கோடி நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: ஆண்டிறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்

TAGGED:Arrest ProcedureConditional BailConstitutional RightsMadras High CourtPolice GuidelinesTamil Nadu DGPஅரசியலமைப்பு சட்டம்கைது நடைமுறைசென்னை உயர் நீதிமன்றம்டிஜிபி உத்தரவுநிபந்தனை ஜாமீன்போலீஸ் விதிமுறைகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?