By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
    ஸ்வீடன் அலுவலக கலாசாரம் குறித்து இந்திய பெண் பகிர்ந்த வீடியோ வைரல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
    திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவதே சிறப்பு
    2 Min Read
    வீடுகளில் மயிலிறகை வைப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன!!!
    1 Min Read
    ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? தப்பிக்க குதித்த செவிலியர் காயம்
    1 Min Read
    மாரடைப்பால் ஸ்டியரிங்கில் சாய்ந்த அரசு பஸ் டிரைவர்: பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்
    1 Min Read
    தவசிக்கீரை அளிக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழகத்தில் தொடரும் கனமழை: 800 கி.மீ. நீள இடிமின்னல் மேகத்திரள்! உள் மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தமிழகத்தில் தொடரும் கனமழை: 800 கி.மீ. நீள இடிமின்னல் மேகத்திரள்! உள் மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை
தமிழகம்

தமிழகத்தில் தொடரும் கனமழை: 800 கி.மீ. நீள இடிமின்னல் மேகத்திரள்! உள் மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

Nagaraj
Last updated: September 17, 2026 1:57 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் மாறுபட்ட வானிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மத்திய ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தென் தமிழகம் வரை சுமார் 800 கிலோமீட்டர் நீளத்துக்கு உருவான இடிமின்னல் மேகத்திரள்கள் காரணமாக உள் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.

சென்னை வெதர்மேன் அஜித் குமார் வெளியிட்டுள்ள வானிலை தகவலின்படி, நேற்றைய தினம் உருவான இந்தப் பிரம்மாண்டமான இடிமின்னல் மேகத்திரள்கள் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வழக்கமாக வறண்ட வானிலை காணப்படும் திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பதிவானது. நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்த மேகங்கள்

இலங்கைக்கு கிழக்கே நிலவிய வளிமண்டலச் சுழற்சி காரணமாக மழை மேகங்கள் வழக்கமான நகர்விலிருந்து மாறுபட்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்ததாக அஜித் குமார் தெரிவித்துள்ளார். இதனால் கடலோரப் பகுதிகளில் உருவான மழை மேகங்கள் உள் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து மழையை கொடுத்துள்ளன.

இதேபோன்ற வானிலை அமைப்பு தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால், உள் மாவட்டங்களில் மழை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்மேற்குப் பருவமழை படிப்படியாக விலகுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இம்மாத இறுதியில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வார இறுதியில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 செ.மீ. மழை

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செப்டம்பர் 16-ம் தேதி அறிக்கையின்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மதனூர், உளிபெந்தா, ஆண்டியப்பனூர் பகுதிகளில் 8 செ.மீ.; சலினாயனப்பள்ளி, கோபனப்பள்ளி, ஓசூர், ஆலங்காயம், நல்லூர், கோட்டமிட்டா, ஒடுகத்தூர், மேலலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.

தென்கனிக்கோட்டை, ராசிபுரம், கிருஷ்ணகிரி, குடியாத்தம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ. வரையும், மதுரை பேரமையூர், நெடுங்கல், கரூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ. வரையும் மழை பதிவாகியுள்ளது.

வரும் செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 17-ம் தேதி இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், திருச்சி விமான நிலையத்தில் 37.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

 

You Might Also Like

திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவதே சிறப்பு

வீடுகளில் மயிலிறகை வைப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன!!!

அந்தமான் கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி? – ஒடிசா, ஆந்திராவை நோக்கி நகரும்!

ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? தப்பிக்க குதித்த செவிலியர் காயம்

மாரடைப்பால் ஸ்டியரிங்கில் சாய்ந்த அரசு பஸ் டிரைவர்: பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்

TAGGED:HeavyRainRainAlerttamilnaduThunderstormweatherWeatherForecastஇடிமின்னல்கனமழைதமிழகம்மழை எச்சரிக்கைவானிலைவானிலை முன்னறிவிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?