சென்னை: நெல்லிக்காய் தலைமுடி உதிர்வுக்குப் பெரும் தீர்வாக உள்ளது, இதனை தலையில் அப்ளை செய்தாலும் சரி, தினமும் ஒன்று என்ற அளவில் சாப்பிட்டாலும் சரி தலைமுடி உதிர்வுப் பிரச்சினை கட்டுக்குள் வரும். நெல்லிக்காய்யில் ஹேர்பேக் செய்து தலைமுடி உதிர்வை தீர்க்கலாம்.
தேவையானவை:
நெல்லிக்காய்- 2
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
மிளகுத் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை: நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அந்த சாறினை தேங்காய் எண்ணெயில் சேர்த்து சாறு முழுவதுமாக இறங்கும்வரை காய்ச்சி, இறுதியாக மிளகுத் தூள் சேர்த்து இறக்கவும்.
இந்த ஹேர்பேக்கினை 24 மணி நேரம் கழித்து தலைமுடியில் அப்ளை செய்து, சீயக்காய் தடவிக் குளித்தால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை சரியாகிவிடும்.
