வாக்காளர் பட்டியல் தொடர்பான Form 6-ல் செய்யப்பட்டதாக கூறப்படும் மாற்றங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
Form 6 என்பது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான முக்கிய விண்ணப்பப் படிவமாகும். இதன் விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் பரவிய நிலையில், அதை தலைமை நீதிபதி மறுத்துள்ளார்.
தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்த விளக்கம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
