தென்மேற்கு பருவமழை விலகும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் வடஇந்தியாவின் டெல்லி–என்சிஆர், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு இமயமலை பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், விதர்பா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
