ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் அடுத்த தலைமைப் பொறுப்புக்கான போட்டியில் சீனா தாமதமாக தனது வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியுள்ள சூழ்நிலையில், ஐ.நா. அமைப்புகளுக்குள் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக சர்வதேச தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
உலக சுகாதாரம், தொற்றுநோய் தடுப்பு, மருந்து விநியோகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் WHO முக்கிய பங்கு வகிப்பதால், அதன் தலைமைப் போட்டி சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
WHO தலைமைப் பொறுப்பில் எந்த நாட்டின் வேட்பாளர் இடம்பெறுகிறார் என்பது எதிர்கால உலக சுகாதாரக் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
