தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்ட நிலையில், சில எதிர்க்கட்சித் தலைவர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
