புற்றுநோய்க்கான சிகிச்சை செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முக்கிய புற்றுநோய் மருந்துகளின் விலை குறைவதற்கான வாய்ப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் மருந்துகளுக்கான வரிச்சலுகைகள் காரணமாக சில முக்கிய மருந்துகளின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக விலை உயர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இது முக்கிய நிவாரணமாக அமையக்கூடும்.
சில உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு வழங்கப்பட்டிருப்பதும் சிகிச்சைச் செலவைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
