மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தி வந்த அமெரிக்கா தற்போது மியான்மர் ராணுவத் தலைமையுடன் நேரடி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
2021-ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு மியான்மர் ராணுவத்துடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள மிக உயர்மட்ட தொடர்பாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவர் மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடிமகனை விடுவிப்பது மட்டுமின்றி, இணைய மோசடி கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் மியான்மரின் அரிய கனிம வளங்கள் தொடர்பான விவகாரங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் மியான்மர் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
