தென்கொரியாவின் சியோல் நகருக்கு அருகே உள்ள புண்டாங் பகுதியில் புதன்கிழமை பயணிகள் பஸ் ஒன்று அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்தில் 9 பேர் படுகாயமடைந்ததாகவும், 48 பேர் லேசான காயமடைந்ததாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைக்ஷந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது வாகனக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த விபத்தையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
