உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அபுதாபியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோ, ஐரோப்பிய அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளின் கருத்துகளும் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தம், பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும் எதிர்கால அமைதி ஏற்பாடுகள் தொடர்பாக இந்த ஆலோசனைகள் முக்கியமானதாக அமையும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
