அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே கார் ஒன்று பாதுகாப்புத் தடுப்பில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.
விபத்து நடைபெற்ற பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாகத் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.
சம்பவத்தின் பின்னணி மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
