ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அபுதாபியில் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
உக்ரைனின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கான பாதுகாப்பான பாதைகளை உருவாக்க இந்தியா உதவத் தயாராக இருப்பதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
