தேவையான பொருட்கள்:
நறுக்கிய மீன் – அரை கிலோ
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – நான்கு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – ஐந்து
கொத்தமல்லி தழை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, மிளகாயை பொடியாக நறுக்கவும். மீனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அதை புரட்டவும். அடுப்பை சிம்மில் வைத்து மிதமான தீயில் வேக விடவும். மீன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவும்.