தமிழில் பூ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. அந்த படத்தில் நடிக்கும் போது அவர் 19 வயது தான் இருந்தார். மலையாளத்தில் தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்த பார்வதி, தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்த நிலையில், சுதந்திரப் போராட்டத்தின் போது கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திய படம். இந்நிலையில், பூ படத்தில் பார்வதியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் சசி தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பார்வதி. தற்போது விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்து வரும் பார்வதி, தனது நடிப்பில் மாஸ் காட்டியிருக்கிறார். இந்த படத்தின் கதைக்களம் சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎஃப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பார்வதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதற்கு முன் சசியின் பூ படத்தில் நடித்தார். இந்த படம் 2008 இல் வெளிவந்து சிறந்த விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிக்கும் போது பார்வதிக்கு 19 வயதுதான். அந்த வயதிலும் நடிகர் ஸ்ரீகாந்தின் காதலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இயக்குனர் சசி, நடிகை பார்வதியிடம் கமர்ஷியல் விளம்பரங்களில் நடிக்க முடியுமா என்று கேட்டதாகவும், அதை தவிர்த்து வந்ததற்கான காரணங்களை கூறியதாகவும் கூறியுள்ளார்.
“கேமரா முன் பொய் சொல்ல மாட்டேன்” என்று சொல்லும் பார்வதி, இன்றுவரை அதே தெளிவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார். ஆனால், அப்போது அவர் விளம்பர உலகிற்கு செல்லவில்லை.
பூ படத்தில் கூடுதல் கால்ஷீட்டுக்காக பார்வதிக்கு ஒரு லட்சம் ரூபாய்செக் கொடுத்ததாகவும், அதை வாங்கிக் கொண்டு சென்றவர் திரும்பி வந்து செக்கை திருப்பி கொடுத்ததாகவும் சசி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, பார்வதி அவருடைய அடிப்படையில் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக சாசியின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.