மும்பை: நான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை நிறுத்திய பின் சுவாசம் சீராக இருப்பதை உணரமுடிகிறது” என நடிகர் ஷாரூக் தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமாவில் அன்பாக கிங் கான் என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆவார்.
ஷாருக்கான் அவரது 59-வது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார்.
அப்பொழுது நடைப்பெற்ற மீட் அண்ட் கிரீட் என்ற பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான் “நான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை நிறுத்திய பின் சுவாசம் சீராக இருப்பதை உணரமுடிகிறது” என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நேர் காணலில் ஷாருக்கான் தான் ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். உணவு , தண்ணீர் என எதுவும் உட்கொள்ளாமல், 30 கப் காபி மட்டும் குடித்துக்கொண்ட காலமும் இருந்தது என கூறியது குறிப்பிடத்தக்கது.
தனது 59 வது பிறந்தநாளை முன்னிட்டு இதை கூறியது ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.