சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் குதிரைவாலி அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம் வாங்க.
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி: ஒரு கப்,
கெட்டியான தேங்காய்ப்பால்: ஒரு கப்,
தண்ணீர்: ஒரு கப்,
நெய்: 3 டீஸ்பூன்,
ஏலக்காய்,
பட்டை,
லவங்கம்,
கறிவேப்பிலை: தேவையான அளவு,
சர்க்கரை: ஒரு சிட்டிகை,
உப்பு: தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலி அரிசியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில், தண்ணீரில் நன்கு களைந்த குதிரைவாலி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.
முக்கால் பதம் வெந்ததும். உப்பு, தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்க்கவும். சாதம் வெந்தவுடன். நெய்யில் தாளித்த ஏலக்காய், பட்டை, லவங்கத்தை தேங்காய் சாதத்தில் சேர்த்துக் கிளறி இறக்கவும். சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.