சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,080 குறைந்து நகை வாங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இன்று பவுன் ரூ.320 குறைந்து பவுன் ரூ.56,360-க்கு விற்பனையானது. ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து இரண்டு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரப்படி, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, அதிகமாகவும், குறைவாகவும் விற்கப்படுகிறது. கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ம் தேதி பவுன் ரூ.59,520 ஆக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் இன்று நவம்பர் 13, 22 காரட் நகைகள் கிராம் ஒன்று ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.7,045 ஆகவும், பவுன் ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.101-க்கு விற்பனையானது. கடந்த 13 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.