சென்னை: நீங்கள் செய்வது மட்டும் நியாயமா என்று நேற்றைய நயன்தாரா அறிக்கைக்கு எதிர்கேள்வி கேட்டுள்ளார் இயக்குனர் ஒருவர். நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம்.
இவர் நேற்று ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டு 2 வருடங்கள் ஆனது. அதனால் அப்பட பாடல்கள் இல்லாமல் ஒரு சின்ன வீடியோவுடன் வெளியிட்டதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டிருப்பது தனுஷின் எண்ணத்தை காண்பிக்கிறது என பெரிய அறிக்கை வெளியிட்டார்.
நயன்தாரா அறிக்கை இப்போது பரபரப்பாகி வர அவரை கேள்வி கேட்டு இயக்குனர் குமரன் பதிலடி கொடுத்துள்ளார். LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்து விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம் என கேட்டுள்ளார்.