நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். தமிழில் ரிவால்வர் ரீட்டா வெளியாகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தனது உறவினர் ஒருவருடன் வரும் டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை கீர்த்தி சுரேஷ் உறுதிப்படுத்தவில்லை. இவருக்கு திருமணம் நடந்ததாக சில முறை செய்திகள் வந்தன. அதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.