சென்னை: எளிய முறையில் உங்கள் எடையை குறைக்க சீரகம் உதவுகிறது. வீட்டில் சீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை பயன்படுத்தி இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான பொருளாகும் .
இரும்புச்சத்து இதில் அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபின் அளவை சரிசெய்கிறது. சுவாசக்குழாய்களில் உள்ள கிருமிகளை அகற்றுகிறது.
இந்த பானம் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதன் பிறகு அந்த சாறுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த சாற்றை இரவில் சாப்பிட்ட பின் அரைமணிநேரம் கழித்து மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். இந்த சாற்றை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் போதும் அந்த பலன் சீக்கிரமாக தெரிய வரும். கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடிக்கக்கூடாது.