சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கிரிக்கெட் மீதான தனது காதலை பகிர்ந்து கொண்டார். “எனக்கு கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
ஆனால் விளையாட நேரம் கிடைத்ததில்லை. சிறுவயதில் தான் விளையாடினேன். இரவு நேரங்களில் கிரிக்கெட் போட்டிகளின் சிறப்பம்சங்களை பார்க்கிறேன்,” என்றார்.
மேலும் விராட் கோலி, பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்றும், முன்னாள் வீரர்களில் தனக்கு ராகுல் டிராவிட் தான் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.