சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஜீப்ரா’. இந்தியா முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. சத்யதேவ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இந்த அளவு வெற்றியை எதிர்பார்த்து நான் நடிக்கவில்லை.
ஒவ்வொரு நாளும் நல்ல விமர்சனங்கள் வருகின்றன. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாக சொன்னார். தெலுங்கில் 15 வருடங்களாக நடித்து வருகிறேன். நான் இன்னும் தெலுங்கு கற்கவில்லை. சத்யதேவ் என்னை தெலுங்கில் டப்பிங் பண்ணினார். இயக்குனர் ஈஸ்வர் எனக்கு அருமையான படத்தை கொடுத்துள்ளார்,” என்றார்.
சத்யதேவ் பேசுகையில், ”தமிழகத்துடன் எனக்கு தனி தொடர்பு உள்ளது. தமிழ் படங்கள் என்னை ஈர்க்கின்றன. எனக்கு எப்போதும் தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அது ‘ஜீப்ரா’வில் நடந்ததில் மகிழ்ச்சி. இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன்” என்றார்.