பெரம்பலூர்: மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கைது செய்தனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர் அத்துமீறுவதாக மாணவிகள் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது.