ராமநாதபுரம்: புயல் சின்னத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று, ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தேவிப்பட்டினத்தை அடுத்த அழகன்குளம், அம்மன் குடியிருப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு சென்ற மீன்வளத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள், அங்கு ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.