சென்னை: கண்பார்வையை உயர்த்தும் உணவு பொருட்கள்… கண் பார்வையை மேம்படுத்தும் பிற பொருட்களில் வேறு எந்த எந்த பொருட்கள் கண்களுக்கு எந்தமாதிரியான நன்மைகள் செய்கிறது என்று பார்க்கலாம்.
வைல்ட் ரோஸ் டீ: கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ , இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது.
கொத்தமல்லி தழை: கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அனைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.
கேரட்: இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் உங்கள் கண் பார்வையை சீராக வைக்க உதவும்.
ப்ரோக்கோலி: கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
மீன்: மீன்களில் குறிப்பாக, காலா மீன், கெளுத்தி மீன் வயதான பின் ஏற்படும் பார்வைப் பிரச்சனைகளை சரி செய்யும்.
அவகேடோ அல்லது பட்டர் ப்ரூட்: கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் அனைத்து சத்துக்களும் அதாவது வைட்டமின் பி, சி, ஈ லூடைன், பீட்டா கரோடின் கொண்டது அவகேடோ.