புதுடில்லி: விவசாயிகள் பேரணி ஒத்திவைப்பு… சம்பு எல்லையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் டெல்லி நோக்கிய பேரணியை ஒத்திவைத்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜால் புயன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்ய இருக்கிறது. பொதுநல வழக்கு தொடர்பான மனுவில் சம்பு எல்லை உள்பட அனைத்து நெடுஞ்சாலைகளையும் திறக்க மத்திய, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், நெடுஞ்சாலையை மறிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோடு தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் மற்றும் இந்திய நீதிச் சட்டத்தின் கீழ் குற்ற செயல் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், நெடுஞ்சாலையை மறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் நடத்தும் விவசாயிகளை நெடுஞ்சாலையில் இருந்து அகற்ற மத்திய, பஞ்சாப், ஹரியானா அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.