சென்னை: காணும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ரூ.2 கோடி வசூலித்துள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள 32 பணிமனைகளுக்கும் வசூல் கட்டணத்திற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் சென்னையில் காணும் பொங்கல் வசூல் இலக்காக மொத்தம் ரூ.2.75 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் ரூ.2.06 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.