சென்னை : அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிஎஸ்என்எல் இணைய சேவை தரவுகளை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதை உடனடியாக செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இணைய சேவை பெறாத பள்ளிகளும் உடனடியாக அதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.