பஞ்சாப்: பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.
பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில் சீக்கியர்களின் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இந்த கோயில் வளாகத்திற்குள் இரும்புக் கம்பியுடன் நுழைந்த சுல்ஃபான் என்பவர், பக்தர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார்.
அப்போது, 5 பேர் காயமடைந்தனர். அதில், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சுல்ஃபானை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவரை போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
இந்த தாக்குதல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.