தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த வாழைப்பழம் – 2
கோதுமை மாவு – 1 கப்
உப்பு – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
பால் – தேவையான அளவு
சோடா உப்பு – 1 சிட்டிகை
பிரட் – 5 துண்டுகள்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் பஜ்ஜி மாவு பதத்திற்கு தேவையான அளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சோடா உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைப்பழ பிரட் பஜ்ஜி தயார்.