புதுடெல்லி: சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணராக கருதப்படும் விக்ரம் மிஸ்ரி (59), அந்நாட்டின் புதிய வெளியுறவு செயலராக நேற்று பொறுப்பேற்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் வினய் குவாத்ரா மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், ஜூலை 14ம் தேதி வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில் நேற்று வினய் குவாத்ரா ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய வெளியுறவுத்துறை செயலராக விக்ரம் மிஸ்ரி நேற்று பொறுப்பேற்றார். 1989-ம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான விக்ரம் மிஸ்ரி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.
அதற்கு முன்பு அவர் 2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றினார். ஜூன் 2020 இல், கால்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகித்தார். விக்ரம் மிஸ்ரி ஸ்பெயின் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். பெல்ஜியம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
1997-ல் ஐ.கே.குஜ்ரால், 2012-ல் மன்மோகன் சிங், 2014-ல் நரேந்திர மோடி என 3 பிரதமர்களின் தனிச் செயலாளராக இருந்தார். விக்ரம் மிஸ்ரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் வாழ்த்து: எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வெளியுறவுத்துறை செயலாளராக புதிய பொறுப்பை ஏற்றுள்ள விக்ரம் மிஸ்ரிக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில், “விக்ரம் மிஸ்ரி வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வெளிவிவகார அமைச்சு உற்சாக வரவேற்பு அளித்துள்ளது. அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.